Tuesday, February 2, 2010

பிப்ரவரி 4ஆம் நாளை கரிநாளாக அனுசரிப்பு : டென்மார்க்கில் தமிழர் பேரணி

இலங்கையில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்ரமித்த பிப்ரவரி 4ஆம் நாளை, கரிநாளாக அனுசரிக்கப்போவதாக டென்மார்க் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாக டென்மார்க் தமிழர் பேரவை உள்ளிட்ட அங்குள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன. இதற்காக பிப்ரவரி 4ஆம் நாளை கரிநாளாக அறிவிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், தமிழர்கள் இழந்துள்ள உரிமையை மீட்கக் கோரி அன்றைய தினம் மாபெரும் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். டென்மார்க் கோபன்ஹேகன் நகரசபை முன்பிருந்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தை நோக்கி, வரும் 4ஆம் தேதி பேரணி நடத்தப்போவதாகவும் டென்மார்க் வாழ் தமிழர்கள் அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment